ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC), பாரசீக வளைகுடாவில் ரோந்து சென்று கொண்டிருந்த 2 அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களை (விமானந்தாங்கிக் கப்பல், ஏவுகணை அழிப்பான்) குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.
எனினும் இதனால் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை
இதற்கு பதிலடியாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகில் ஒரு தாங்கியும், ஜாஸ்க்கிற்கு அருகில் மற்றொரு தாங்கியும் நிரந்தரமாக செயலிழக்கச் செய்யப்பட்டன.
“நீங்கள் எங்கள் 2 கப்பல்களை சுட்டால், நாங்கள் உங்கள் 3 கப்பல்களை அழிப்போம்” என தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.










