அப்பா கவிதைகள்

அப்பா கவிதைகள்

அப்பா கவிதைகள்

💙💗💜கையில் ஏந்தி, தோள்களில் சுமந்துஇ நீ காணா உயரங்களை நான் காண ஆவல் கொண்டாயே.! தன்னலம் இன்றி உமை யாவையும் எனக்கு அளித்து எதிர்பார்ப்புகளுக்கு எதிரி ஆனாயே! என் தோழனாகிய தந்தையே!

💙💗💜தரை மீது நம் பாதம்பட கூடாதென தோள் மீது நமை சுமந்து புது உலகை நமக்கு காட்டி நம்மை புத்தம் புதிதாய் ஆக்கியவர் அப்பா..

💙💗💜கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..?

💙💗💜பலரது வாழ்வில் கடைசி வரை விளங்கிக்கொள்ள முடியாத புத்தகம் அப்பா..!

💙💗💜அவமானங்கள் பல சுமந்து தடைகள் பல கடந்து நம் வீட்டை கட்டிக் காக்து தன் குடும்பத்துக்காய் வாழும் ஒரு ஜீவன் அப்பா

💙💗💜நான் ரசித்த அழகிய இசை என் அப்பாவின் இதயத்துடிப்பு.

💙💗💜அப்பாவை தவிர நமக்கு நல்ல நடத்தையை வாழ்க்கையில் வேறு எந்த ஆசானாலும் கற்பிக்க முடியாது.

💙💗💜பத்து மாதம் சுமந்த தெய்வம் அம்மா வாழ்க்கை முழுக்க சுமக்கும் தெய்வம் அப்பா

💙💗💜தோல் மீதும் மார்பு மீதும் என்னை சாய்த்து என் வழிகளை எல்லாம் தாங்கி வழிகாட்டும் கலங்கரை விளக்காய் என் பாதைகள் முழுக்க வெளிச்சம் தந்தாயே அப்பா.

💙💗💜பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தங்கிடும் ஒரே உயிர்!

💙💗💜அப்பாவின் கண்டிப்பில் கோவம் இருக்கிறதோ இல்லையோ அளவில்லாத பாசம் கண்டிப்பாக இருக்கும்

💙💗💜அப்பாவின் தோழில் ஏறிசாமியை பார்க்கும் போது தெரியவில்லைசாமியின் தோள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று!

💙💗💜அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும் ஒரே உறவு அப்பா! 

💙💗💜அம்மாவை கோபித்து உந்தன் மார்பினிலே முகத்தை புதைத்திட்டு ஓரக் கண்ணாலே உன்னைப் பார்த்த சிறு வயது இன்னுமே என் மனதில் திடமாக பதிந்து இருக்கிறது என் அப்பா

💙💗💜உலகில் நான் உயரும் போதல்லாம் எனக்கு கீழ் இருப்பவனே, வழிதவறி, நெறிதவறி நான்விழும் நேரமெல்லாம் எனைத்தாங்கி பிடிப்பதற்க்கே,

💙💗💜ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் நடமாடும் ஓர்உயிர் அப்பா!

💙💗💜நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் அப்பா,  அம்மா..

💙💗💜அப்பா என்ற ஒன்றின் இலக்கணத்தில் அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம், வெகுளித்தனம் என இவை அனைத்தும் அடங்கி விடும்.

💙💗💜நல்ல நடத்தையை யாரும் கற்பிக்க முடியாது தந்தையை தவிர இந்த உலகில்.

💙💗💜தனக்கு கிடைக்காத அனைத்து சந்தோஷங்களும் தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்து வாழும் உயிர் தான் அப்பா

💙💗💜அப்பா எதனையோ சரிவுகளுக்குப் பிறகும்இ தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை !

அப்பா கவிதைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்