அப்துல் கலாம் பொன்மொழிகள்

அப்துல் கலாம் பொன்மொழிகள்

அப்துல் கலாம் பொன்மொழிகள்

💥இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறந்த கவிஞரும் ஆவார்.

💥திருக்குறள் மீது பற்று கொண்டிருந்த அப்துல் கலாமின் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிமுறைகள் நிறைந்த சிறந்த பொன்மொழிகள் ஆகும். அந்தவகையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பொன்மொழிகள் என்ன டின்பதைப் பார்ப்போம்.

  1. கனவு காணுங்கள் கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அது தான் கனவு.
  2. முடியும் வரை முயற்சி செய்.. உன்னால் முடியும் வரை அல்ல.. நீ நினைத்த செயல் முடியும் வரை.
  3. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
  4. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.
  5. உங்களால் உங்கள் எதிர்காலத்தை மாற்ற முடியாது, ஆனால் உங்களால் உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியும், மேலும் உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடும்.
  6. நான் ஒரு அழகான பையன் அல்ல, ஆனால் உதவி தேவைப்படும் ஒருவருக்கு, என்னால் கை கொடுத்து உதவ முடியும். அழகு முகத்தில் இல்லை, இதயத்தில் இருக்கிறது.
  7. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்.
  8. ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான். ஒரு புத்திசாலி தான் புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும்போது முட்டாளாகிறான்.
  9. ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான்.
  10. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
  11. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
  12. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
  13. நீங்கள் புகழுடன் பிறந்தால், அது ஒரு விபத்து. நீங்கள் புகழுடன் இறந்தால், அது ஒரு சாதனை.
  14. கற்றல் படைப்பாற்றலைத் தருகிறது, படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது, சிந்தனை அறிவைத் தருகின்றது, அறிவு உங்களைச் சிறந்தவராக மாற்றுகின்றது.
  15. நேற்றைய பொழுதும் நிஜமில்லை. நாளைய பொழுதும் நிச்சயமில்லை. இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
  16. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.
  17. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லைஇ நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும்.
  18. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.
  19. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்
  20. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

அப்துல் கலாம் பொன்மொழிகள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்