அபாய நிலையில் 40 மரங்கள்
கொழும்பின் சில முக்கிய பாடசாலைகளுக்கு அருகிலுள்ள 40 மரங்கள் அபாய நிலையில் இருப்பதாக கொழும்பு மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைச் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களாக பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பில் கொழும்பு மாநகர சபை அவதானம் செலுத்த வேண்டுமென குறித்த சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்