அன்னாசி பழத்தின் நன்மைகள் தீமைகள்

அன்னாசி பழத்தின் நன்மைகள் தீமைகள்

அன்னாசி பழத்தின் நன்மைகள் தீமைகள்

🟢🟡அன்னாசிப் பழத்தின் அறிவியல் பெயர் ஆனாநஸ் கோமோசஸ் ஆகும். இது ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் என்றும், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ஆனானஸ் என்றும், மலையாளத்தில் கைட்டச் சக்கா என்றும், தெலுங்கில் அனானஸ் பண்டு என்றும் அழைக்கப்படுகிறது.

🟢🟡அன்னாசிப் பழம் 100 கிராமில் 50 கிலோ கலோரிகள் உள்ளன. மாவுச் சத்து 13.12 கிராமும்இ புரதச் சத்து 0.50 கிராமும் உள்ளன. மேலும் 1.2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அன்னாசிப் பழத்தின் நன்மைகள்

🍍அன்னாசிப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுதில் முக்கிய பங்காற்றுகிறது.

🍍ஆன்டிஆக்ஸிடன்ட்டான வைட்டமின் சிஇ அதன் இயற்கையான மூலத்தில் இருந்து சாப்பிடும்போது அல்லது மேற்பூச்சாகப் பயன் படுத்தும்போதுஇ ​​சூரியன் மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் தோல் சேதத்தை எதிர்த்துப் போராடவும்இ சுருக்கங்களை குறைக்கவும்இ ஒட்டுமொத்த தோல் அமைப்பை மேம்படுத்தவும் அன்னாசி உதவுகிறது.

🍍அன்னாசிப் பழத்தில் குறிப்பிட தகுந்த அளவில் கால்சியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.

🍍அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

🍍அன்னாசிப் பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர் சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான மற்றும் ஆரோக்கியமான செரிமானப் பாதையை மேம்படுத்தவும் உதவுகிறது.

🍍அன்னாசிப்பழத்தை தவறாமல் உட்கொள்வது வயதாகும்போது கண்ணை பாதிக்கும் நோய்களான மால்குலர் சிதைவு அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள அதிக வைட்டமின் சி மற்றும் பல ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பார்வையை மேம்படுத்துகிறது.

🍍அன்னாசிப் பழத்தில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

🍍பைன் ஆப்பிள் சாப்பிடும் குழந்தைகள் சைனஸ் நோய்த் தொற்றிலிருந்து வேகமாக குணமடைவார்கள்.

🍍அன்னாசி பழங்களில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நம்முடைய உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.

🍍அன்னாசி பழங்களில் அதிக அளவு வைட்டமின் சிஇ சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், கேன்சரை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கஸ்ல்களின் உற்பத்தியைத் தடுக்க உதவிபுரிகின்றது.

அன்னாசிப் பழத்தின் தீமைகள்

🍍நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆன்டிகோகுலண்டுகள், ஆன்டி கான்வல்சண்டுகள், பார் பிட்யூரேட்டுகள், பென்சோடியா செபைன்கள், தூக்கமின்மை மருந்துகள் மற்றும் ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸன் ஆகியவற்றை எடுத்துக் கொள்வோர் அன்னாசிப் பழத்தை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

🍍பழுக்காத அன்னாசிப்பழம் அல்லது அன்னாசி பழச்சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு நச்சுத் தன்மையளிக்கக் கூடியதாக சொல்லப்படுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும்.

🍍அன்னாசிப்பழத்தில் அதிக வைட்டமின் சி உள்ளதால் அதிக அளவில் அன்னாசி பழத்தை உட்கொள்ளவது சிக்கலை ஏற்படுத்தும்.

🍍சி வைட்டமின்களை அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம். எனவே, அன்னாசிப்பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.

அன்னாசி பழத்தின் நன்மைகள் தீமைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்