அனுமதியின்றி பொலிஸ் நிலையத்தை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) பிங்கிரிய பிரதேச செய்தியாளர் தினித் குமார, பொலிஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அனுமதியின்றி வீதியில் நின்று பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் காட்சிகளை பதிவு செய்யும் போது, பிங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக,  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்பட்டதன் பின் பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்ட பின்னரும் அவர் தொடர்ந்து காட்சிகளை பதிவு செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்