அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் காயம்
கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்கலன் வாகனம் மாத்தறையில் இருந்து கடவத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போதுஇ அதே திசையில் பயணித்த கெப் வாகனம் கொள்கலனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெப் ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்த தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்