அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி,  தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மரக்கறி விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

1 கிலோ போஞ்சி 450 – 500 ரூபாய் வரையிலும், 1 கிலோ முட்டைகோஸ் 350 – 400 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

அதேபோன்று, 1 கிலோ கரட்டின் விலை 600 – 650 ரூபா வரையும், 1 கிலோ வெண்டைக்காய் 260 – 270 ரூபாய் வரையும் பதிவானது.

ஒரு கிலோ தக்காளி 400 – 420 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 1200 – 1250 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

1 கிலோ கிழங்கு 600 – 620 ரூபாய் வரை விற்பனையானது.

மேலும், 1 கிலோ கத்தரிக்காய் விலை 480 – 510 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்