அதிகமான யுவதிகள் பணிக்காக செல்லும் நாடு: ஆய்வில் தகவல்

2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2,064 பேர் அதிகமான இலங்கையர்கள் வேலைகளுக்காக கொரிய நாட்டிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 1,892 பேர் முதல் தடவையாக தென்கொரியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்கு 1708 பேரும் மீன்பிடி தொழிலுக்கு 351 பேரும் கட்டுமானத் துறைக்காக 5 பேரும் தென்கொரியாவுக்கும் சென்றுள்ளனர்.

மேலும், 41 யுவதிகளும் கடந்த மாதங்களில் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்