
அண்ணனை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தம்பி
மாத்தளை மாவட்டத்தில் கத்திரிக்கோலால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரன் கத்திரிக்கோலால் தாக்கியதில் மூத்த சகோதரர் படுகாயம் அடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட பொலிஸார் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
