அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்திணைக்களத்தினால் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.