
அடுத்த மாதம் சா.தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவனுக்கு நேர்ந்த கதி
குருநாகல் – கிரியுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவனான வத்தேவ அமரகொட பிரதேச அத்தியட்சகரின் மகனான ரவிடு டில்ஷான் (வயது – 17) என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தேவ சனசமூக மண்டபத்திற்கு அருகில் நேற்று காலை ஆரம்பமான மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட இம்மாணவன் 500 மீற்றர் தூரத்திலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்ததாக புத்தாண்டு விழாவை காண சென்ற சிலர் பொலிஸ் விசாரணையின் போது கூறியுள்ளனர்.
அத்துடன் போட்டி நடந்த நேரத்தில் அப்பகுதியில் வெயில் அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
