அஜித் நிவாட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தவு
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 2012ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களில் முதலீடு செய்து அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக குறித்த நால்வருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதன்படி கையூட்டல் எதிர் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்தும் முன் கொண்டு செல்ல முடியாது என அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஏனையவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிரதிவாதிகளை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்