
அசானிக்கு கோலாகல வரவேற்பு
இலங்கை சிறுமி அசானிக்கு இந்தியாவின் கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறுமி அசானி தமிழகத்தில் நடந்து வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
அவர் வெற்றி பெற வேண்டும் என்று இலங்கையர்கள் மட்டும் இன்றி, உலகவாழ் தமிழர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அசானி தனது தந்தையுடன், கடலூர் கிராமத்திற்கு உறவினர்களை காணச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து கிராமத்தினர் கொண்டாடியுள்ளனர்.
