அசாதாரண காலநிலை காரணமாக சில குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுகின்றது.

அந்தவகையில் மழையினால் யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில், ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும், ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வேலணை பிரதேச செயலர் பிரிவில், ஜே/26 கிராம சேவகர் பிரிவில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்