அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியின் கணனி ஆய்வுக்கூடம் மறுசீரமைக்கப்பட்டு கணனிகள் வழங்கி வைப்பு

கொமர்ஷல் வங்கியினால் அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியின் கணனி ஆய்வுக்கூடம் மறுசீரமைக்கப்பட்டு கணனிகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கொமர்ஷல் வங்கியின் சீ.எஸ்.ஆர் வேலைத்திட்டத்தின் ஊடாக. 6.5 மில்லியன் ரூபா செலவில் கணனி ஆய்வுகூடம் மறுசீரமைக்கப்பட்டு 15 கணனிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இதேவேளை, அடுத்த கட்டமாக சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கும் இக்குழு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.