அக்கரபத்தனை பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று நாகசேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த அமர்வு சபையின் புதிய தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில் இடம்பெற்றது.

சபையின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் சபையின் அமர்வின் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள் என்பன  இதன்போது தவிசாளரால் முன்வைக்கப்பட்டது.

இந்த அமர்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சார்ந்த சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.