அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் 5 ஆவது பேராளர் மாநாடு
அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் 5 ஆவது பேராளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, சங்கத்தின் ஸ்தாபகரான அமரர் சீ.உமேஸ்காந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் எச் எம் ஏ ஜி திலகரட்ண கலந்து கொண்டார் மற்றும் மட்டக்களப்பு அஞ்சல் அத்தியட்சகர் எஸ் ஜெகன், அம்பாறை பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்.எம் பைஸர், மட்டக்களப்பு பிரதம போதனாசிரியர் பி.நரேந்திரன், மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அதிபர் எம் ஜெயரட்ணம், அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்க தலைவர் எம் எஸ் சிவனேசராசா, யூபிடிஓ மட்டக்களப்பு கிளை சங்க தலைவர் ஏ.சுகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், வடக்கு கிழக்கில் உள்ள அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்