Last updated on January 18th, 2025 at 10:17 am

"ஹைலண்ட் பால்மா" நிலையத்தை திறந்த அமைச்சர்

“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்துவைத்த கடற்றொழில் அமைச்சர்

-யாழ் நிருபர்-

இலங்கைத் தயாரிப்பான “மில்கோ – ஹைலண்ட் பால்மா” உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் வியாழக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் “ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM