
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது
கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட ஐவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கொலன்னாவைலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் 12 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவர்கள் கைதாகினர் .
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.