ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு
ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மண்சரிவு நிலைமை பாரதூரமானதாக இருக்கக்கூடும் என்பதால், வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
இதேவேளை நாட்டில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்