ஹமாஸ் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் பலி

காசாவிலிருந்து ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் இருந்து குறித்த பகுதியை நோக்கி 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தாக்குதல் காரணமாக கெரேம் ஷலோமின் எல்லைப் பகுதியை இஸ்ரேல் மூடியுள்ளது.

மேலும் காசாவுக்குள் மருத்துவப் பொருட்களை கொண்டு செல்லும் பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்