ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியாவின் – ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார மாளிகைக்கு வெளியே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அதேநேரம் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பாவின் முக்கிய தேர்தலாக கருதப்படும் ஸ்லோவாக்கியாவின் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 3 வாரங்களில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்