
வேக கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி விபத்து
அனுராதபுரம் – மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.
அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 37 வயதுடைய இருவரே இதன்போது உயிர் இழந்துள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாததால் குறித்த கெப் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சாரதியும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்