வெள்ளி, தங்கம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளி, தங்கம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளி, தங்கம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

⭕அழகுக்காகவும், ஜோதிட சாஸ்திரத்தின் படியும் பலர் வெள்ளியிலோ தங்கத்திலோ வளையல் அணிந்திருப்பார்கள். ஜோதிட சாஸ்திரப்படி கையில் வெள்ளி மற்றும் தங்கம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வெள்ளி அணிவதால் கிடைக்கும் பலன்

⚪வெள்ளி அணிவதால் பொதுவாக உடலில் ஏற்படும் காயத்திற்கு நிவாரணம், ஐந்து உள் உறுப்புகளுக்கு நிவாரணம், படபடப்பு நீக்கம் உள்ளிட்டவைகள் நடைபெறும். வெள்ளி பொதுவாகவே மனித ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளை தரக்கூடியது. வலுவான பாக்டீரியா எதிர்ப்பு விளைவையும் கொண்டுள்ளது.

⚪மனித உடலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்களை வெள்ளி உறிஞ்சுவிடும் என சொல்லப்படுகிறது. அதனால் தான் பலரும் வெள்ளி அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாகவே வெள்ளி குளிர்ச்சி என்பதால், உடல் சூட்டை இழுத்து கொள்ளும்.

⚪வெள்ளியில் உருவாகும் மோதிரம், கொலுசு, வளையல் என அனைத்தும் அணிந்த பின் உடலுக்குள் நரம்புகளின் வழியே சென்று உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து எவ்வித நோய் தொற்றுகளும் நம்மை அணுகாமல் பாதுகாத்து கொள்கிறது.

⚪சாஸ்திரங்களின் அடிப்படையில் வெள்ளி அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. அதனை கைகளில் அணிந்துக்கொண்டால் பணத்துக்கு பஞ்சமே ஏற்படாது. மேலும் மகா லட்சுமியின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும்.

தங்கம் அணிவதால் கிடைக்கும் பலன்

🟠தங்கம் பாதுகாப்பு குணங்களை கொண்டுள்ளது. மேலும் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற உதவுகிறது. தங்கம் உடலில் ஏற்படும் கெட்ட விஷயங்களை செயல்படாமல் தடுத்து, அந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

🟠இதன் வீரியத்தால் அனைத்து கெட்ட விஷயங்களும் நீங்கிவிடும். தங்கத்தை சரியாக அணிந்தால் அது ஏராளமான அதிர்ஷ்டத்தை வழங்கும் என சொல்லப்படுகிறது. தங்கத்திற்கு இயல்பாகவே அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் திறன் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

🟠தங்கத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் காணப்படுகின்றது. சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக தங்கம் செயல்படுவதோடு பல அழகுசாதனப் பொருட்களிலும் மற்றும் சரும பராமரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள். தங்கம் சூரியபகவானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதால் சமூகத்தில் மரியாதையை அதிகரிக்கும்.

வெள்ளி, தங்கம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்