வெள்ளத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
களுத்துறையில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீகஹதென்ன, கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
களுத்துறை – கோரகாதுவ பிரதேசத்தில் குறித்த நபரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்