வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் பெட்டிக்குள் மசாஜ் : பின்னணி என்ன?

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டிக்குள் மசாஜ் செய்துகொள்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்து ரயில்வே திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சுற்றுலாத் தேவைகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் இந்த ரயில் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி ரயில்களை வாடகைக்கு எடுக்க முடியும் என்றாலும், மசாஜ் செயல்பாடு குறித்து திணைக்களத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது, அத்துடன் சுற்றுலா பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 வானொலி