வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது!

-மன்னார் நிருபர்-

மன்னார் பேசாலை பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வியாழக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளது.

30 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களும் பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்