வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க