
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை!
வலஸ்முல்ல – ஹொரேவெல பகுதியில் வியாழக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வலஸ்முல்ல – ஹொரேவெல, கொஸ்ருப்ப தோட்டத்தில் வசித்து வந்த 61 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஆவார்.
குறித்த வீட்டில் அவர் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த ஒருவர், இவ்வாறு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த வீடு தொடர்பான வழக்கு விசாரணை, நிலுவையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்