வீட்டில் குழந்தையுடன் தனிமையில் வசித்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கிரிந்திவெல, உருபொல பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் வசிப்பதாகவும், அவரது கணவர் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தனியாக இருந்த வேளையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை.

கிரிந்திவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்