வீட்டின்மண் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
இந்தியாவில் கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக சூலூர் அருகே காங்கேயம் பாளையத்தில் மண் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரவு 2 மணி அளவில் ஏதோ சத்தம் கேட்கவே வெளியே எழுந்து சென்றபோது திடீரென வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து அவர் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகாலை வெகுநேரமாகியும் சங்கர் கணேஷ் வராததால் சந்தேகம் அடைந்து இடிபாடுகளை அகற்றி தேடியபோது பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்