விசேட அதிரடிப்படையினரால் கஞ்சாவுடன் இளைஞன் கைது

-வவுனியா நிருபர்-

வவுனியாவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியை சேர்ந்த 26 வயதுடை இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் புளியங்குளம் பகுதியில் நேற்றைய தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பரிசோதனை செய்ததில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 5கிலோ 124 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்