வாழைச்சேனை பொலனறுவை வீதியில் விபத்து: ஒருவர் பலி – 3 பேர் காயம்
வாழைச்சேனை பொலன்னறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த கனகசூரியன் (வயது – 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியும் வாழைச்சேனையில் இருந்து புனானை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேச்தைச் சேர்ந்த எம்.வினோதன், கணவதிப்பிள்ளை யோஹனா மற்றும் ரிதிதென்னையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான உசனார் மஜிதீன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்