வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
தபால் திணைக்களம் 10 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகளை இதுவரை விநியோகித்துள்ளதாக பிரதி தபால் அதிபர் ராஜித ரணசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் அடுத்த சில நாட்களில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.
வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்ய தபால் திணைக்களம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்துக்குச் சென்று அடையாளத்தை சரிபார்த்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
தேர்தல் நாள் வரை வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.