வாகன விபத்து: 15 பேர் படுகாயம்

இரத்தினபுரி எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் 98வது மைல் கம்பியில் நேற்று சனிகிழமை கெப் வண்டி மற்றும் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய நோக்கி பயணித்த வேன் வீதியில் யு டர்ன் எடுத்துக்கொண்டிருந்த போது, ​​கெப் வண்டியின் மீது மோதி கவிழ்ந்துள்ளது, தொடர்ந்து வேன் மீது மோட்டார் சைக்கிளும் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உட்பட வேனில் இருந்த 14 பேர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேனின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்