வாகன விபத்து: மூன்றரை வயது குழந்தை பலி

கொடகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன் தாய், தந்தை மற்றும் சகோதரர் காயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்