வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!
-வவுனியா நிருபர்-
வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர், இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டமையால் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கார்த்திக் (வயது 45) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்