Last updated on May 8th, 2024 at 10:09 am

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமன் மரணம்

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமன் மரணம்

வவுனியா, மதுரா நகர் பகுதியில் இன்று மாலை மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார்.

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மூர்த்தி (வயது 42) என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவஇடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க