வளத்தாப்பிட்டி வீதி முற்றாக நீரில் மூழ்கியது!

-சம்மாந்துறை நிருபர்-

சேனநாயக்க சமுத்திரத்தின் வான்கதவு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் திறக்கப்பட்டமை காரணமாக,  அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி புகைபரிசோதனை நிலையத்திற்கு அருகாமையில், அதாவது காஞ்சரையடி பொலிஸ் சோதனைச்சாவடி, முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியால் பயணம் செய்பவர்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Minnal24 FM