வறுமை காரணமாக தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபர்

வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூரமான சம்பவம் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் தனது மனைவி, 42 மற்றும் எட்டு மாதங்கள் முதல் 10 வயது வரையுள்ள நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் ஆகிய ஏழு குழந்தைகளை கோடரியால் தாக்கியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத காரணத்தினால் தான் இந்த கொலைகளைச் செய்ததாக சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, பொலிஸ் கண்காணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்