
வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
மாத்தறை பகுதியில் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெய்யந்தர மற்றும் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்த 42 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெய்யந்தர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சீனிகல்ல கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ஐந்து தோட்டாக்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 9 மிமீ வெடிமருந்துகள் கொண்ட பத்து சுற்றுகள் கொண்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்ட் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்கள்தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.