வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை: சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது ஐம்பதாயிரம் ரூபா பணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொஸ்தாவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க