வட ஆபிரிக்காவின் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் 16 சடலங்கள் மீட்பு
வட ஆபிரிக்க நாடான துனிசியாவின் கிழக்கு கடற்கரையில் 16 புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சடலங்கள் புகலிட கோரிக்கையாளர்களின் சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சடலங்கள் மிகவும் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாதவாறு காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் மத்திய தரைக்கடல் ஊடாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்டு, இவர்கள் பயணம் செய்த படகு சீரற்ற காலநிலை காரணமாக விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என (IOM) தெரிவிக்கின்றது.