வட்ஸ்அப் மூலம் சதித்திட்டம் : சக மாணவரை கொன்ற மாணவர் குழு!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமரச்சேரியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவருக்கும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் சில மாணவர்களுக்கும் கடந்த 23 ஆம் திகதி வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவாகியுள்ளது.

முன்விரோதம் காரணமாக சில மாணவர்கள் இணைந்து குறித்த மாணவனைத் தாக்கியதில் அம்மாணவன் பலத்த காயமடைந்துள்ளதாகவும், அங்கிருந்து தப்பி ஓடிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப் குழுவின் மூலம் குறித்த மாணவனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் ஐவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க