தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது அவசியம்!

வடக்கில் சமீபத்தில் இராணுவமுகாம் அகற்றப்பட்டமை குறித்தும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் பொதுமக்களிடம் மீள நிலங்களை ஒப்படைப்பது பொதுவாக பிரச்சினைக்குரிய விடயம் இல்லை என்றாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இது குறித்து பாதுகாப்பு தரப்பினருடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை 30 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டது ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து சமூகத்தினரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு தெற்கு என எந்த பகுதியாகயிருந்தாலும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.