வகுப்பறையில் ஆசிரியைக்கு மசாஜ் செய்த 3 ஆம் வகுப்பு மாணவர்கள்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் 3ஆம் வகுப்பு ஆசிரியையான ரேகா சோனி என்ற ஆசிரியை தனது வகுப்பறையில் மாணவர் ஒருவரை தனக்கு மசாஜ் செய்ய வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.
அதில், வகுப்பறையில் படுத்திருக்கும் அந்த ஆசிரியையின் காலில் மாணவர் ஒருவர் மசாஜ் செய்து கொண்டிருப்பதும், பிற மாணவர்கள் படித்துக்கொண்டிருப்பதும் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோவை பார்த்த கல்வித்துறை உயர் அதிகாரிகள் மூத்த அதிகாரி ஒருவரை பள்ளிக்கு அனுப்பி விசாரணை நடத்தினர்.
இதன்போது வகுப்பறையில் இந்த விதிமீறல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. உடனே அந்த ஆசிரியையை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்