லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவும் காட்டுத்தீ: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயானது, காற்று காரணமாக மேலும் அதிகரிக்கக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத்தீ காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை விட்டு அதிகமானோர் வெளியேறியுள்ள நிலையில், அங்கு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
காட்டுத்தீயின் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பதற்கும் அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்