Last updated on April 11th, 2023 at 07:58 pm

ரயில் தடம்புரண்டு விபத்து

ரயில் தடம்புரண்டு விபத்து : 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்டம் கந்தளாய்-அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை 12.55 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

கல் ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் கித்துல்உதுவ பகுதியில் தடம் புரண்டதாக தெரிய வருகின்றது.

Shanakiya Rasaputhiran

இவ்விபத்தில் காயமடைந்த 17 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மூன்று ஆண்களும், ஒரு சிறுவனும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad