-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது – 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கு வாய் பேச முடியாது என்பதுடன் கேட்டல் திறனும் இல்லை. இந்நிலையில் இவர் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளை ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்